7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) அமைப்பினர் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: கடந்த மாதம் டிட்டோஜேக் அமைப்பு சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 6-ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையொட்டி, மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்துக்கு இணையாக தமிழக அரசு இடையநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். தன்பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துகின்றோம். இதில் மாநிலம் முழுதும் ஒரு லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment