Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 21 February 2014

TRB: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 8 அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பாலிடெக்னிக்குகளில் நேரடி நியமனமான விரிவுரையா ளர்களும், பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பதவிகளைப் பொருத்தமட்டில், பொறியியல், பொறியியல் அல்லாத ஆசிரியர் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்றவை)என 2 வகையாக இருக்கின்றன. 

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு பொறியியல் பாடங்களுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு பொறியியல் பாடத்துக்கு எம்.இ. அல்லது எம்.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டத்துடன் நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சி அவசியம். பி.எச்டி. பட்டதாரியாக இருந்தால் நெட், ஸ்லெட் தேர்ச்சி தேவையில்லை. இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 600 விரிவுரை யாளர் பணியிடங்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர் பணியிடங் களும் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வுமூலமாக நிரப்பப்பட உள்ளன. பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கான காலியிடங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.இதற்கான அறிவிப்பை இந்த மாத இறுதியில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.42 ஆயிரம் கிடைக்கும். பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தர ஊதியம் (கிரேடு பே) ரூ.600 அதிகம் என்பதால் அவர்கள், விரிவுரையாளர்களை காட்டிலும் கூடுதலாக ரூ.1000 சம்பளம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: