தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கு தகுதி மதிப்பெண்ணில் சலுகைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பழனிமுத்து, கருப்பையா, ரமேஷ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறி மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தேசிய ஆசிரியர் கல்வி வாரிய விதிகளின் படி மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும் என்றும், பிற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் சலுகைக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.