தொலைநிலைக் கல்வியில் ஒரு படிப்பை தேர்வு செய்யும் முன்பாக, உங்களின் எதிர்கால நோக்கம் என்ன என்பதை தீர்க்கமாக சிந்தித்து, அதற்கேற்ப முடிவெடுப்பதே சிறந்தது.
ஒரு பொதுவான பட்டப் படிப்பை தேர்வு செய்து படிப்பவர், ஒரு பொதுவான நிர்வாகப் பணிக்கு செல்ல முடியும் அல்லது இருக்கும் பணியிலிருந்து ஒரு பதவி உயர்வை, அந்தப் படிப்பின் மூலம் எதிர்பார்க்கலாம். அதேசமயம், ஒரு தனித்துவமான பட்டப் படிப்பை, உதாரணமாக, வரலாறு, சமூகவியல் அல்லது வணிகவியல் போன்ற படிப்புகளை மேற்கொள்ள நினைத்தால், B.A அல்லது B.Com படிப்புகளை மேற்கொள்ளலாம்.
தொலைநிலைக் கல்வியில், கல்லூரிக்கோ அல்லது பல்கலைக்கோ நேரடியாக சென்று, ஆசிரியரின் வழிகாட்டுதல் இல்லாமலேயே படிக்கும் வகையில், பாடத்திட்ட உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
ஒருவர், புரபஷனல் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ள வேண்டுமென விரும்பினால், அல்லது ஏற்கனவே அதுதொடர்பான பணியில் இருந்தால், BBA அல்லது MBA போன்ற படிப்புகளை, அவரது கல்வித் தகுதிக்கேற்ப தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
அதேசமயம், ஒருவரின் விருப்பம் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்து இருந்தால், அதுதொடர்பான இளநிலை அல்லது முதுநிலைப் படிப்புகளை, தகுதிக்கேற்ற வகையில் மேற்கொள்ளலாம். இதுபோன்ற படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களுக்கான பிராக்டிகல் நடவடிக்கைகளை நிறைவுசெய்ய, சம்பந்தப்பட்ட ஸ்டடி சென்டருக்கு செல்ல வேண்டியிருக்கும்.
ஏனெனில், பிராக்டிகல் பயிற்சி இல்லாமல் எதுவும் சரிவராது. சில தொழில் நிறுவனங்கள், தொலைநிலைக் கல்வி பயிலும் தங்களின் பணியாளர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் திட்டங்களையும் வைத்துள்ளன. தொலைநிலைக் கல்வி என்பது, ஒரே நேரத்தில் சம்பாதித்தல் மற்றும் படித்தல் ஆகிய நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது.
அறிவியல் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்வோர், வார இறுதி நாட்களில், வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டியிருக்கும். சில திறந்தநிலை பல்கலைகள் வழங்கும் தொலைநிலைப் படிப்புகளில், அவற்றை மேற்கொள்வோர், கவுன்சிலிங் மையங்களுக்கு கட்டாயம் செல்லத் தேவையில்லை என்ற விதிமுறைகள் உள்ளன.
சிலருக்கு add-on படிப்புகளை மேற்கொள்வதில் விருப்பம் இருக்கும். Certificate in Creative Writing படிப்பு அதுபோன்ற படிப்புகளுக்கு ஒரு உதாரணம். இதுபோன்ற add-on படிப்புகளை மேற்கொள்வோர், முக்கிய பட்டப் படிப்பை படித்துக்கொண்டே, இந்தப் படிப்பையும் சேர்த்து ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம்.
எனவே, தொலைநிலைக் கல்வியில் படிப்பை தேர்வு செய்வதென்பது, ஒருவரின் ஆர்வம் மற்றும் எதிர்கால தேவை ஆகிய அம்சங்கள் சம்பந்தப்பட்டது.
No comments:
Post a Comment