பி.எஸ்சி. இயற்பியல் படித்து முடித்ததும், எம்.எஸ்சி., எம்.பில்., பிஎச்.டி. உள்ளிட்ட மேற்படிப்பு மூலம் ஆசிரியர் பணிக்கு செல்லலாம். இயற்பியல் ஆசிரியர் பணியிடத்துக்கு எப்பொழுதும் தேவை உள்ளது. ஆசிரியர் பணி தவிர்த்து பெரிய நிறுவனங்களில் பணிக்கு செல்ல விரும்புபவர்களுக்கு, எம்.எஸ்சி. பட்டமேற்படிப்பில் பல்வேறு சிறப்பு பாடப் பிரிவுகள் உள்ளன. எம்.எஸ்சி. அப்லைடு பிசிக்ஸ், நியூக்ளியர் பிசிக்ஸ், எலக்ட்ரானிக் மாலிகுலர் பிசிக்ஸ், பிராட் பேண்ட் அண்டு ஆப்டிக்கல் கம்யூனிகேஷன், லேசர் பிசிக்ஸ், மெடிக்கல் லேப் டெக்னாலஜி, மெடிஷனல் பிசிக்ஸ் என பட்ட மேற்படிப்புகள் படித்து முடிப்பவர்கள், பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பதவி பெற்று இனிய வாழ்வை நடத்தலாம்.
ஐஐடி, விஐடி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி. சார்ந்த சிறப்பு பாடப் பிரிவுகளில் சேர விரும்புபவர்கள், JAM (ஜாயின்ட் அட்மிஷன் டெஸ்ட்) நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே, இக்கல்வி நிறுவனங்கள் பட்ட மேற்படிப்புக்கு வாய்ப்பளிக்கின்றன. ஐஐடி மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ் பெங்களூரு ஆகிய 2 கல்வி நிறுவனங்கள் இணைந்து, JAM நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. இத்தேர்வு குறித்து வரும் நாளில் விரிவாக தெரிந்துகொள்வோம்.
பி.எஸ்சி. முதல் ஆண்டு படிக்கும்போதே, JAM நுழைவுத் தேர்வுக்கு திட்டமிட்டு படித்து தயாராவதன் மூலம் எம்.எஸ்சி. பட்ட மேற்படிப்பில் விரும்பும் பாடப் பிரிவை தேர்ந்தெடுத்து படிக்க முடியும். எம்.எஸ்சி. மெடிக்கல் பிசிக்ஸ் பட்ட மேற்படிப்பை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். உள்ளிட்ட பெரிய கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
மருத்துவமனைகளிலும், மருத்துவ உபகரணம் தயாரிக்கும் நிறுவனங்களிலும் உயர்ந்த பணியிடத்துக்கு செல்ல முடியும். பிராட்பேண்ட் அண்டு ஆப்டிக்கல் கம்யூனிகேஷன், எம்.எஸ்சி. லேசர் பிசிக்ஸ் பட்ட மேற்படிப்பை மெட்ராஸ் யுனிவர்சிட்டி, கொச்சின் யுனிவர்சிட்டி ஆஃப் சயன்ஸ் அண்டு டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. இப்படிப்பில் ஆராய்ச்சி படிப்புவரை படிப்பதன் மூலம் மிகப் பெரிய நிறுவனங்களில், சிறந்த பணி வாய்ப்பை பெறமுடியும்.
எம்.எஸ்சி. நியூக்ளியர் சயன்ஸ் பட்ட மேற்படிப்பை ஐஐடி, யுனிவர்சிட்டி ஆஃப் புனே ஆகிய கல்வி நிறுவனங்கள் சிறந்த
முறையில் நடத்தி வருகின்றன. இதன் மூலம் பெரிய நிறுவனங்களில் நல்ல பதவியை அடைய முடியும். எம்.எஸ்சி. மெடிக்கல் சயன்ஸ் மற்றும் நானோ டெக்னாலஜி படிப்புகளை அப்துல்ரகுமான் கிரசன்ட் யுனிவர்சிட்டி வழங்குகிறது. எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் பணி வாய்ப்பு பெற விரும்புபவர்கள், விஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இப்படிப்பை படிக்கலாம். எம்.எஸ்சி. பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பு படிக்க விரும்புபவர்களுக்காக, ஐஐஎஸ், பிஎஸ்ஜி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஐந்தாண்டு படிப்பு வழங்குகின்றனர். இப்படிப்பில் சேர JAM நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.
பி.எஸ்சி. படிக்கும் போது, பாடப் புத்தகங்களை மட்டும் படிக்காமல், சிறிய அளவிலான பயிற்சி (புராஜெக்ட்) செய்து திறனை வெளிப்படுத்துவது மேற்படிப்புக்கு உதவிகரமாக இருக்கும். இயற்பியல் பாடம் பரந்து விரிந்த கடலை போன்றது. இதில் நியூக்ளியர் அடாமிக்,
ஆப்டிக்கல் ஃபோட்டானிக்ஸ், எனர்ஜி பிசிக்ஸ் என பல்வேறு சிறப்பு பாடப் பிரிவுகள் மூலம் சிறந்த பணியிடத்தை பிடிக்க முடியும்.
No comments:
Post a Comment