Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 28 February 2014

அரசாணைகளை மதிக்காத தனியார் கல்லூரிகளை கண்டித்து சென்னையில் தொடர் போராட்டம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

அரசாணைகளை மதிக்காத அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளைக் கண்டித்தும், அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்ச் 4-ம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் க. பாண்டியன் புதன்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏராளமா அரசு உதவி பெறும் கல்லூரிகள் அரசாணைகள் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனரின் உத்தரவுகளை மதிக்காமல், பணிபுரியும் ஆசிரியர்களை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கு உரிய ஆதாரங்களுடன் அரசு உயர் அதிகாரிகளிடம் பல முறை புகார்கள் அளித்தும் பலனில்லை.எனவே, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்தும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னையில் மார்ச் 4-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இதில் சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சை ஆகியப் பகுதிகளில் அமைந்துள்ள 72 அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

No comments: