சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பல்கலைக்கழகம் புதன்கிழமை (பிப்.12) வெளியிட்ட செய்தி:
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வுச் சுருக்கம், ஆய்வறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்க அளிக்கப்பட்ட மறு பதிவு காலத்திலும் பதிவு செய்யத் தவறிய மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்த விரும்புபவர்கள் அபராதத் தொகையாக ரூ. 15,000 செலுத்தவேண்டும். மேலும், ஆய்வுச் சுருக்கத்தை (சினாப்சிஸ்) 30-6-2014 தேதிக்கு முன்பாகவும், ஆய்வறிக்கையை (தீசிஸ்) 31-12-2014 முன்பாகவும் சமர்ப்பிக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சிப் படிப்புக்கு பதிவு செய்த மாணவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களை www.unom.ac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment