Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 7 February 2014

பிப்ரவரி 2014: விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், விண்ணப்பிப்பதற்கான  கடைசி தேதிகள் ஆகியவற்றைக் காட்டும் காலண்டர்.

யோலா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசினஸில் (லிபா) சேர்ந்து மேனேஜ்மெண்ட் படிப்புகளைப் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 1.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில்  முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக ஆன்லைனில் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி 1 முதல் 7 வரை.

முக்கியத்துவம் வாய்ந்த  பொறியியல் கல்வி நிறுவனங்களில் உதவித்தொகையுடன் முதுநிலை பொறியியல் பட்டப் படிப்பில் சேர விரும்புபவர்களுக்கான  GATE நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி 1 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை.  

எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்காக அகில இந்திய மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் நடத்தும் –MAT தேர்வு (காகிதத்தில் எழுதும் தேர்வு) நடைபெறும் தேதி: பிப்ரவரி 2.

பெங்களூருவில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் முதுநிலை பட்டப் படிப்புகளைப் படிக்க விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 7.

நாட்டில் உள்ள அரசு வேளாண் பல்கலைக்கழகங்களில் வேளாண் படிப்புகளில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வு (AIEEA ) எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 7.

ன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் பர்ஸனல் செலக்ஷன் (IBPS) நடத்தும்  வங்கி சிறப்பு அதிகாரிகள் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி 8 மற்றும் 9.  

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன்  தேர்வு எழுத விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க  கடைசி தேதி: பிப்ரவரி 14.

பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி நிலையத்தில் பல்வேறு பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர்  பிட்சாட் நுழைவுத் தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15.

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் I  தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி 16.

ல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் உதவித்தொகையுடன் ஒருங்கிணைந்த பிஎச்டி படிக்க விரும்பும் மாணவர்களுக்கான JEST நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி 16.

தெற்கு ரயில்வேயில் டெக்னீஷியன் உள்ளிட்ட பணிகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 17.

கால்நடை மருத்துவப் படிப்புக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் AIPVT  நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க  கடைசி தேதி: பிப்ரவரி 18.

எம்.பி.ஏ., மேலாண்மைப் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ படிக்க விரும்புபவர்களுக்காக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் ஆன்லைன் மூலம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு (CMAT) நடைபெறும் தேதி:  பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 24 வரை.

ரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித்தொகை பெற திறன் தேர்வு நடைபெறும் தேதி:  பிப்ரவரி 22.

நேஷனல் ஃபோர்டு ஆஃப் ஹையர் மேத்மேட்டிக்ஸில் கணிதத்தில் கோடை கால இலவசப் பயிற்சி பெற முதுநிலை பட்டதாரி மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 22.

ந்திய விமானப் படையின்  பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய நடத்தப்படும் விமானப்படை பொது அட்மிஷன் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி 23.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பணிகளில் சேர டிஎன்பிஎஸ்சி நடத்தும் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:  பிப்ரவரி 23.

முதுநிலை பார்மசி படிப்புகளுக்காக அகில இந்திய தொழில்நுட்ப  கல்விக் கவுன்சில் நடத்தும் GPAT  ஆன்லைன் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி 25  முதல் பிப்ரவரி 27 வரை.