Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 20 February 2014

ஆசிரியர் தகுதி தேர்வு: 2012ல் தேர்வு எழுதியோருக்கும் மதிப்பெண் சலுகைகோரி மனு

தமிழகத்தில் 2012ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி தென்னூரை சேர்ந்த வின்சென்ட், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு 2012 ஜூலையில் முதல் முறையாக தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

அதில் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதே ஆண்டு அக்டோபரில் நடந்த துணைத்தேர்வில் 11 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதி தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதிப்பெண் சலுகை வழங்கவேண் டும் என அரசுக்கு கோரிக்கை வி டுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று பொதுப்பிரி வினர் தவிர்த்து மற்ற பிரிவுகளை சேர்ந் தவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க தமிழக அரசு பிப்ரவரி 6ல் உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் 2013ம் ஆண்டில் நடந்த தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த சலுகையை 2012ம் ஆண்டில் ஜூலை மற்றும் அக்டோபர் மாதம் நடந்த தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் வழங்கவேண்டும். நான் 2012ல் நடந்த தேர்வில் 83 சதவீத மதிப்பெண் பெற்றேன். எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால் தேர்வில் வெற்றிப்பெறுவேன். எனவே, 2013ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். 2012 தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது. மனுவை நீதிபதி எம். எம்.சுந்தரேஷ் விசாரித் தார். மனுவுக்கு 2 வாரத் தில் பள்ளி கல்வி செயலா ளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments: