பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மாநிலம் முழுவதும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதும் மாணவர்கள் முதல்முறையாக பொதுத்தேர்வை எதிர்கொள்ளவுள்ளனர். இந்த மாணவர்களின் தேர்வு அச்சத்தைப் போக்குதல், குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குதல், தேர்வு எழுதுவதற்கான அறிவுரைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து மாநில அளவில் இந்தப் பயிற்சியை வழங்க உள்ளன.
முதல் கட்டமாக, கல்வி மாவட்டத்துக்கு 2 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 130 ஆசிரியர்களுக்கான பயிற்சி சென்னையில் பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இந்த ஆசிரியர்கள் தங்களது கல்வி மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சியை வழங்குவார்கள்.
மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம், அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் 8 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment