Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 30 January 2014

ISI-யில் புள்ளியியல் படிப்புக்கு விண்ணப்பம்

கொல்கத்தாவில் உள்ள Indian Statistical Institute (ISI), இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கு சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
2014-15ம் கல்வியாண்டில் 3 வருட இளங்கலை படிப்பான (B.Stat) Hons., (B.Math) Hons., 2 வருட படிப்பாக M(Stat.) (M.Math) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இளங்கலை படிப்புக்கு +2வில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுகலை பட்டப் படிப்புக்கு 3 வருட இளங்கலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் வழியாக www.isical.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 5 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு இணையதள முகவரியை பார்க்கலாம்.

No comments: