படைப்புத் திறன் துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்த இலவசக் கருத்தரங்குகளை ட்ரீம் ஜோன் நிறுவனம் சென்னையில் தொடங்கி உள்ளது.
கடந்த சனிக்கிழமை (ஜன.25) தொடங்கிய இந்தக் கருத்தரங்கு வரும் ஏப்.5- ஆம் தேதி வரை நடக்கிறது.
இதில் பிப்.1 - நகை வடிவமைப்பு, பிப்.8 - வாழ்த்து அட்டை வடிவமைப்பு, பிப்.15 -லோகோ வடிவமைப்பு, பிப். 22 -நெயில் ஆர்ட், மார்ச் 1 - நவீன வாஸ்து மற்றும் சமையலறை வடிவமைப்பு, மார்ச் 8 - கைப் பைகள் வடிவமைப்பு, மார்ச் 22 - இணையதளம் வடிவமைப்பு, மார்ச் 29 -பசுமை வடிவமைப்பு மற்றும் ஏப்ரல் 5 - சேலைகள் வர்த்தகம் ஆகிய தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்றுவதுடன் செயல்முறை விளக்கமும் அளிக்கின்றனர். விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களை 91769 72786, 98843 33697, 98401 50004 ஆகிய எண்களில் பெறலாம்.
No comments:
Post a Comment