தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் 25-ம் தேதி ஈரோட்டில் நடந்தது.
ஊதிய முரண் பாட்டை களைவது, அரசாணை எண் 720-ல் மாற்றம் செய்து பதவி உயர்வு வழங்குவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மாணவர்கள் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்த தேர்வுத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என்றும், மார்ச் இறுதிக்குள் மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி உரிய தீர்வு காணப்படாவிட்டால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்பது என்றும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மாநில தலைவர் ஜி.சுப்பையா, மாநில பொதுச் செயலாளர் ஆர்.விஜயகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment