Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 31 January 2014

தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் 3,589 பணியிடங்களுக்கான தேர்வு ரத்து : மீண்டும் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு


தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள, 3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தியே, ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த மனு: கூட்டுறவு நிறுவனங்களில், உதவியாளர் பணியிடத்துக்கான நேரடி நியமனம் குறித்த அறிவிப்பாணை, நவம்பர் 2, 2012ல் வெளியானது. "மொத்தம், 3,589 காலியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி, நவம்பர் 23, 2012' என, தெரிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வு, டிச., 9, 2012 அன்று நடத்தப்பட்டது. டிச., 20, 2012ல் தேர்வு முடிவுகள் வெளியானது. உதவியாளர் பணி நியமனத்தில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கவில்லை. கூட்டுறவு துறை ரீதியான பயிற்சி பெறாதவர்களும் நியமிக்கப்பட்டனர். ஜாதி வாரியான ஒதுக்கீடு, தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. தேர்வு முறையில், விதிமீறல்கள் இருந்தன. எனவே, தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த, நீதிபதி சுப்பையா, "ஆவணங்களை பார்க்கும் போது உதவியாளர் பணிக்கான தேர்வில், முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிய வருகிறது. எனவே, தேர்வு ரத்து செய்யப்படுகிறது. புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு, முறைப்படி தேர்வு நடத்தியே பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, உத்தரவிட்டார். 

No comments: