Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 24 December 2013

TRB முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் 2012-13 - பொங்கலுக்குள் தேர்வுப் பட்டியல்:

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் தவிர பிற பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்திருந்தாலும், இதுவரை யாரும் பணி நியமனம் செய்யப்படவில்லை.
போட்டித் தேர்வு விடைகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் புதிய  வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வுசெய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடுவதிலும் தாமதம் நிலவுகிறது.
இந்த வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்து வருகிறது. வரும் பொங்கலுக்குள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: