Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 25 November 2013

TNPSC: பணியில் சேர்ந்து 5 ஆண்டு ஆன அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாது


தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கான எழுத்து தேர்வு வரும் டிச. 1ல் நடைபெற உள்ளது. 

 தேர்வாணையத்தின் இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும் வசதி முதன் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டது. உரிய முறையில் விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி ஆணை யம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று மாலை இத்தேர்விற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இதில் கூடுதல், குறைவான வயது, அரசு பணியாளர்களாக 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி மொத்தம் 1,0 55 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் இவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பணியில் சேர்ந்த தும் பிறதுறை மற்றும் உயர் பதவிகளுக்காக தொடர்ந்து தேர்வு எழுதும் நிலை தற்போது வழக்கத்தில் உள்ளது. இதனால் வேலை கிடைக்காதவர்களின் வாய்ப்பையும் இவர்கள் தட்டிப் பறிக்கும் நிலை இருந்து வந்தது. 

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பணியில் சேர்ந்தாலும் 5 ஆண்டுகளுக்குள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதிக்கொள்ளும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

No comments: