Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 23 October 2013

TRB - TET தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட கோரி மனு


மதுரை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சூரியா. மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, பிஎட் முடித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) தகுதித் தேர்வை கடந்த 14.10.2012ல் எழுதினேன். எனக்கு ‘பி’ வரிசையில் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. இதில் பாடத்திட்டத்தில் இல்லாத பல கேள்விகள் கேட்கப்பட்டன.

தேர்வாணைய வெப்சைட்டில் பதில்கள் வெளியிடப்பட்டன. இதில் 9 கேள்விக்கான பதில்கள் தவறாக உள்ளது. இதன் காரணமாக எனக்கு போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. 90 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. தவறான கேள்விக்கான மதிப்பெண்களை எனக்கு வழங்கினால் நான் 95 மதிப்பெண் பெற்று தேர்வாகும் வாய்ப்பு உள்ளது. எனவே தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து ஆசிரியர் தேர்வாணைய தலைவர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments: