Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 17 October 2013

சித்தமருத்துவப்படிப்பு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 21ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மாற்றும் நேச்சுரோபதி ஆகிய படிப்புகளுக்கான இந்தாண்டுக் கலந்தாய்வு 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இந்தாண்டு கூடுதல் இடங்களுக்கான வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக கலந்தாய்வு நடைபெறும் நாளிலேயே அறிவிக்கப்படும் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதம் கிடைக்காத மாணவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் அக்டோபர் 30ம் தேதி கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: