Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 19 September 2013

TNPSC - குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 1 தேர்வின் முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 27, 28, 29 தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மை தேர்வு, அக்டோபர் 25, 26, மற்றும் 27ஆம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் அறிவிக்கப்பட்ட தேதிகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடைபெறவிருந்ததால் இந்த மாற்றம் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

அதேபோல், அக்டோபர் 26ம் தேதி நடைபெறவிருந்த குரூப் 8 தேர்வும் நவம்பர் 16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கும் குரூப் 2 தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 1ம் தேதி, மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு நடைபெற உள்ளது. எனவே அந்த தேர்வு தேதியும் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.