Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 4 February 2013

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி தேர்வில் எந்த சலுகையையும் காட்டக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஆசிரியர் நியமனம் தகுதித் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.

தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுத்தால் சான்றிதழ் சரிபார்ப்புக்கு  அழைக்கப்படுவார்கள்.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த தேர்வில் ஏராளமானோர் தோல்வியடைந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி 2வது முறையாக தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. 

 இதிலும் ஏராளமானோர் தோல்வியடைந்தனர். இதையடுத்து, சஙாகீதா உள்ளிட்ட 14 பேர் ஒதுக்கீடு அடிப்படையில் தங்களுக்கு தகுதி மதிப்பெண்ணில் சலுகை காட்ட வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த வழக்கு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந¢தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:தரம்வாய்ந்த தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. 

இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. தரமுள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்வதில் எந்த சலுகைகளையும் காட்ட முடியாது என்றும் அரசு முடிவு செய்துள்ளது.சில மாநில அரசுகள் சலுகைகளை வழங்கியுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளது தமிழக அரசுக்குப் பொருந்தாது. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஆசிரியர் நியமனத் தில் எந்த சலுகையையும் காட்டக் கூடாது என்று மிகத்தெளிவாக உத்தரவிட்டுள்ளன. எனவே, சலுகை தரக்கோரும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments: