Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 14 February 2013

அரசு கலைக் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.


அரசு கலைக் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் அதிக காலி இடங்கள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 69 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் காலியாக உள்ள 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. உதவி பேராசிரியர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் ஸ்லெட், நெட் தேர்ச்சி அவசியம் இல்லை.அரசு பள்ளி ஆசிரியர்களை போல் போட்டித்தேர்வு ஏதும் இல்லாமல் சிறப்பு மதிப்பெண் வழங்கும் முறை அடிப்படையில் உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு என ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் வழங்கி மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

1,063 காலி பணி இடங்களில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில்தான் அதிக காலி இடங்கள் உள்ளன. பாடவாரியாக முக்கிய பாடங்களில் காலி இடங்கள் விவரம் வருமாறு:–

தமிழ் – 76

ஆங்கிலம் – 140

கணிதம் – 135

இயற்பியல் – 100

வேதியியல் – 95

தாவரவியல் – 60

விலங்கியல் – 55

கம்ப்யூட்டர் சயின்ஸ் – 95

வரலாறு – 77

பொருளாதாரம் – 58

வணிகவியல் – 75

அரசியல் அறிவியல் – 5

நிர்வாகவியல் – 8

புள்ளியியல் – 18

மேற்கண்ட பாடப்பிரிவுகள் தவிர, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, எலெக்ட்ரானிக்ஸ் சயின்ஸ், அக்வாகல்சர் என பல்வேறு சிறப்பு பாடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான காலி இடங்கள் இடம்பெற்றுள்ளன. உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

No comments: