வங்கி அல்லது தபால் நிலையம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஜனவரி மாதம் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 31ஆம் தேதியாகவும் கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜனவரி 3ஆம் தேதியாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மாற்றப்படுவது இதோடு மூன்றாவது முறையாகும். அவகாசம் தேவை என வந்த கோரிக்கைகளை அடுத்து, தேர்வு தேதியும் டிசம்பர் 31ஆம் தேதியிலிருந்து ஜனவரி 27ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருந்தது.
தேர்வு முறையில் மாற்றம்.
குரூப் 1 தேர்வு சிலபஸ் மற்றும் தேர்வு நடைமுறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் 150 கேள்விகள் பொது அறிவு பகுதியிலிருந்தும், 50 கேள்விகள் Aptitude வகையிலும் இருக்கும். MAIN தேர்வு 3 தாள்களைக் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment