ஆசிரியர் பயிற்சி படிப்பு: 13ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி (D.EL.Ed) (D.T.Ed என்பது D.EL.Ed என்று மாற்றப்பட்டுவிட்டது) படிப்பிற்கு, ஜூன் 13ம் தேதி முதல், ஜூன் 26ம் தேதி வரை, 110 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் தேவராஜன்
கூறியிருப்பதாவது: அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், உதவி பெறும் ஆசிரியர்
பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட, 110 மையங்களில்,
விண்ணப்பம் வழங்கப்படும்.
எஸ்.சி.,-
எஸ்.டி., பிரிவினர், 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவினர் 500 ரூபாய்
செலுத்தியும், விண்ணப்பங்களை பெறலாம். பிளஸ் 2 தேர்வில், குறைந்தபட்சம்
540 மதிப்பெண் பெற்றவர்கள், இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., -
எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர், தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
ஜூலை
21ம் தேதியன்று, 30 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், 35 வயது வரை
இருப்பவராக இருக்கலாம். ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும்
விதவையாக இருந்தால், 40 வயது வரை உள்ளவர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை பெறும் இடங்களிலேயே, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். ஜூன் 23ம் தேதி மாலை 5:45 வரை விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார். (அறிவிப்பு பிழை: விண்ணப்பம் ஜூன் 26 வரை தரப்படும் என குறிப்பிட்டுள்ளதால் கடைசி தேதி ஜூன் 26 என மாற்றப்படலாம் அல்லது ஜூன் 23 வரை விண்ணப்பம் அளித்து ஜூன் 23ம் தேதியையே கடைசி தேதியாகவும் அறிவிக்கலாம் )
No comments:
Post a Comment