Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 29 August 2014

DSE: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு

அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலை / தொடக்கப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்/ இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாகக் கீழ்க்கண்ட அட்டவணையின்படி காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  1. முதுகலை ஆசிரியர்கள்- (மாவட்டத்திற்குள்)   30-08-2014
  2. முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்)    31-08-2014
  3. இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்)  01-09-2014
  4. இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டம்)   02-09-2014
  5. பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்)    03-09-2014
  6. பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்)  04-09-2014 மற்றும் 05-09-2014
கலந்தாய்வு நடைபெறும் இடம்

1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.
2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்
3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.
5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.
12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.
13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.
16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.
17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.
18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).
19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்
20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.
21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.
22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.
23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.
24 திருவள்ளூர் ஸ்ரீ லெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்
26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.
27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி
28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.
30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.
31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

No comments: