Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 8 May 2014

சென்னையில் மே 10-இல் ரஷிய கல்விக் கண்காட்சி

ரஷியாவின் முன்னணி மருத்துவம் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் கல்விக் கண்காட்சி, சென்னையில் மே 10-ஆம் தேதி தொடங்குகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில், வரும் 10, 11-ஆம் தேதிகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில், கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், ட்வர் மாநில மருத்துவ அகாதெமி, வோல்கோகிராட் மாநில தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், குபான் ஸ்டேட் டெக்னிக்கல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ரஷிய அரசின் 11 முன்னணி மருத்துவம் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழுடன் வரும் மாணவ -மாணவியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் கண்காட்சியிலேயே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை அளிக்கப்படும்.
ரஷியப் பல்கலைக்கழங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேரும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்படும்.
இக் கண்காட்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். கூடுதல் விவரங்களை 044 - 2498 8215, 92822 21221 ஆகிய எண்களில் பெறலாம் என்றார் லொமகின்.

No comments: