உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் இன்று ஜூன் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்று யுனிசெப் கூறியுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆய்வறிக்கையின்படி, தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை படிபடிப்யாகக் குறைந்துள்ளது என்றும், 2014ஆம் ஆண்டில் பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 - 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது 99.3 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment