பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் பட்டியல் ஜூன் 15ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த மார்ச் மாதம், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8,82,260. இதில் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பித்தவர்கள் 1,00,566.
இவற்றில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் 2,835, மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்கள் 3,502 ஆக மொத்தம் 6,337. இதில் மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 696. மறுமதிப்பீட்டில் மாற்றம் உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 2,782. ஆக மொத்தம் 3,478.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் 15.06.2015 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிடப்படும். இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண் மாற்றம் உள்ளதேர்வர்கள் ஜூன் 16ம் தேதி காலை 10.00 மணி முதல் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை தெரிவித்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment