Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 17 June 2014

TRB-TNTET: 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.  அதனடிப்படையில் 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப்பட்டியல் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை குறித்து இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

No comments: