பொறியியல் சேர்க்கைக்கு கூடுதலாக கால அவகாசம் வழங்கக் கோரி தனியார் பொறியியல் கல்லூரிகள் சார்பில் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏஐசிடிஇ மற்றும் தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வரும் 23ம் தேதிக்குள் இது குறித்து பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்க உத்தரவிடக் கோரி தனியார் பொறியியல் கல்லூரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment