Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 17 June 2014

தொழில் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தொழில்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவை சார்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் 2,279 மாணவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.  புதிதாக விண்ணப்பிப்பவர்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளும், புதுப்பித்தலுக்கு நவம்பர் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

 மாணவர் கடந்தாண்டு பொதுத் தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாயிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன் லைனில் பதிவு செய்த விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி, மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன், கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் அக்டோர் 10ஆம் தேதிக்குள்ளும், புதுப்பித்தலுக்கு நவம்பர் 20ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
 மேலும் விவரங்களுக்கு சிறுபான்மையினர் நல ஆணையர் அலுவலக தொலைபேசி 044-28523544 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

No comments: