Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 28 February 2014

பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள்களை எடுத்துவர புதிய முறை

பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகள் தொலைவதைத் தடுக்க, தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறை வாகனங்களிலேயே விடைத்தாள்களைக் கொண்டுவர அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள்கள் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்களை எடுத்துவரும்போது அவை தொலைந்துபோயின. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இந்த ஆண்டு தபால் துறைக்குப் பதில் தனியாரை பணியமர்த்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறையினரின் வாகனங்களிலேயே விடைத்தாள்களை மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடைத்தாள்களை எடுத்துவரும் பொறுப்பு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இதற்காக பிரத்யேகமான வாகனங்களை அமர்த்திக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பான முழுமையான அறிவிப்பு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வினாத்தாள்களை விநியோகிக்கவும் வாகனம்: வழக்கமாக, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு தங்களுடைய சொந்த வாகனங்களில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வினாத்தாள்களைத் எடுத்து வருவர்.
இந்த ஆண்டு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து 4,5 தேர்வு மையங்களுக்குச் செல்லும் வகையில் வழித் தடங்களை அமைத்து வினாத்தாள்களை வாகனங்கள் மூலம் எடுத்துச்செல்லலாம் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

No comments: