பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் நேரத்தை மாற்றி அமைத்தற்கு தமிழக கல்வியாளர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கழக மாநிலத் தலைவர் ஆ.கலைச்செல்வன் தெரிவித்தது:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் நேரத்தை மாற்றி அமைக்கும் முடிவு ஏற்கத்தக்கது அல்ல. நீண்டதூரம் பயணம் செய்து தேர்வு மையத்திற்கு வரும் கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும். எனவே காலை 9.15 மணிக்கு தேர்வு தொடங்கப்படும் என்ற கல்வித்துறையின் முடிவை உடனடியாக தமிழக கல்வித்துறை கைவிட வேண்டும். மேலும் தேர்வு காலங்கள் நெருங்கிவிட்டதால், பேருந்துகளில் வரும் மாணவ, மாணவியர்களுக்கு இடையூறாக திரைப்பட பாடல்கள் ஒளிபரப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதனால் மாணவ, மாணவியர்கள் மனநிலை பாதிக்கப்படுகிறது என ஆ.கலைச்செல்வன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment