Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 12 May 2014

மீன்வளக் கல்லூரி இளநிலை படிப்புக்கு மே 14 முதல் விண்ணப்ப விநியோகம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் 4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்பில் (B.F.SC) சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 14 முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கு.ரத்னகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மீன்வள இளநிலை பட்டப்படிப்பில் முதலாமாண்டில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன. இதில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 14-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் www.tnfu.org.in மட்டுமே பெற முடியும். இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஜூன் 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments: