ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக, வழக்கறிஞர்கள் பழனிமுத்து, ரமேஷ், ராஜரத்தினம் ஆகியோர் தாக்கல் மனுவில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு தேசிய ஆசிரியர் பயிற்சி கல்விக்குழு அறிவுரையின் படி மதிப்பெண்ணில் 5 முதல் 10 சதவீதம் தளர்வு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தளர்வு வழங்கப்படும் வரை இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும், அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர். இறுதி விசாரணை நவம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment