Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 30 October 2013

உளவியல் பேராசிரியர் நியமன வழக்கில் கல்விப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவு

கல்லூரி மாணவர்களின் மன ரீதியான பிரச்னைகளைத் தீர்க்க உளவியல் பேராசிரியர்களை நியமிக்கக் கோரிய வழக்கில் 2 வாரத்திற்குள் விளக்கமளிக்குமாறு கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் ஞானகுரு என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தாகவும், அதில் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் மன ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு புதிய வகுப்புகள், சிறப்பு பேராசியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஞானகுரு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனபாலன் மற்றும் சொக்கலிங்கம், தொழில்நுட்பக் கல்விப் பிரிவின் ஆணையர், உயர்கல்வித்துறை செயலர், கல்லூரிக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் 2 வாரங்களுக்குள் விளக்களிமளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

No comments: