தமிழக அமைச்சரவையில் இன்று மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சராக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே மக்கள் நல்வாழ்வுத் துறையை கவனித்து வந்த, கே.சி. வீரமணிக்கு பள்ளிக் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் புதிய அமைச்சராக பதவியேற்பதற்கான விழா வரும் வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு பதவியேற்ற பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளில் தற்போது 12-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment