Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 24 October 2013

ADMISSION: சைனிக்பள்ளி, அமராவதி நகர்

மத்திய அரசின்பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தும் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2014 -15ம் கல்வியாண்டில் 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய பாடத்திட்டத்தினைக்கொண்ட இந்த உண்டுறைப் பள்ளியில் மாணவர்கள் மட்டுமே சேர முடியும். 1.7.2014 அன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6ம் வகுப்பில் சேர முடியும். 1.7.2014 அன்று 13 வயது முடிந்தும் 14 வயது முடியாமலும் இருந்து, அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே 9ம் வகுப்பில் சேரத்தகுதியுண்டு.
பெற்றோர்களின் மாத வருமானம் 50,000 ரூபாய் வரை, மாநில, மத்திய அரசுகளின் உதவித்தொகை வழங்கப்படும். இப்பள்ளிக்கும், தனியார் பயிற்சி மையங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
தகுதி, மருத்துவ சோதனை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். விளக்கக்குறிப்பேடு, விண்ணப்பப் படிவம் பெற, பொதுப்பிரிவு மற்றும் படைத்துறை பிரிவினைச் சேர்ந்தோர் 650 ரூபாய்க்கும், தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் பழங்குடி வகுப்பினர் 500 ரூபாய்க்கும் (இதில் பதிவுக்கட்டணம், மாதிரி வினாத்தாள், பள்ளியின் குறுந்தகடு, அஞ்சல் செலவும் அடங்கும்) அமராவதி நகர் பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில், "முதல்வர், சைனிக்பள்ளி, அமராவதி நகர்" என்ற பெயரில் "டிடி" எடுத்து கடிதத்துடன் அனுப்பவேண்டும்.
எந்த வகுப்பிற்கு அனுமதிக்கப்பட வேண்டும், நீங்கள் எந்தப் பிரிவினர் என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். சைனிக் பள்ளியின் இணையதளம் www.sainikschoolamaravathinagar.edu.in என்ற முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பதிவுக்கட்டணத்தை படிவத்தோடு சேர்த்துக்கட்ட இயலும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை "முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர் - 642 102, உடுமலை தாலுகா, திருப்பூர் மாவட்டம்" என்ற முகவரிக்கு 7.12.2013 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
5.1.2014 அன்று நுழைவுத் தேர்வு குறிப்பிட்ட மையங்களில் நடைபெறும்.
மேல் விபரங்களுக்கு, 04252 -256 246, 256 296 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: