Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 15 July 2014

பிரிக்ஸ் மாநாடு இன்று தொடக்கம்

"பிரிக்ஸ்' அமைப்பின் 6ஆவது உச்சி மாநாடு, பிரேசில் நாட்டில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தொடங்குகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய, சீன அதிபர்களுடன் செவ்வாய்க்கிழமை முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கும் "பிரிக்ஸ்' அமைப்பின் 6ஆவது உச்சி மாநாடு, பிரேசில் நாட்டின் ஃபோர்டாலிசா மற்றும் பிரேசிலியா நகரங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வரும்படி பிரேசில் அதிபர் தில்மா ரூஃசெப் விடுத்த அழைப்பை ஏற்று மோடி, பிரேசில் சென்றுள்ளார்.

ஃபோர்டாலிசா நகரில் செவ்வாய்க்கிழமை "பிரிக்ஸ்' மாநாடு தொடங்குகிறது. இதில் பிரேசில் அதிபர் தில்மா ரூஃசெப், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்று, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். மாநாட்டில், "பிரிக்ஸ்' அமைப்பின் சார்பில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள புதிய வளர்ச்சி வங்கி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மாநாட்டில், புதிதாக தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சி வங்கியில் "பிரிக்ஸ்' அமைப்பில் இடம்பெற்றுள்ள 5 நாடுகளுக்கும் சமமான பங்குகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்த மோடி திட்டமிட்டுள்ளார். இதேபோல், ஐ.நா. பாதுகாப்பு சபை, சர்வ
தேச நிதியம் ஆகிய அமைப்புகளை சீரமைப்பது குறித்தும் "பிரிக்ஸ்' மாநாட்டில் மோடி பேசவுள்ளார்.
மாநாட்டின் இடையே, ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரேசில் அதிபர் தில்மா ரூஃசெப், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோருடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து மோடி முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும் முறையே இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவர்களுடன் மோடி செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ள பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments: