Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 1 July 2015

பொதுப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு இன்று தொடக்கம்

பொறியியல் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது.
முதல் நாளில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கலந்தாய்வில் பொறியியல் கட்-ஆஃப் 200-க்கு 200 எடுத்தவர்கள் முதல் 198.25 கட்-ஆஃப் வரை எடுத்தவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
2015-16 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இரண்டாம் நாளான திங்கள்கிழமை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இவர்களுக்கென மொத்தம் 5,136 பி.இ. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், பங்கேற்பதற்காக 219 மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 200-க்கும் குறைவானவர்களே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். மீதமுள்ள 4,900-க்கும் அதிகமான இடங்கள், பொதுப் பிரிவு கலந்தாய்வு இடங்களில் சேர்க்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்குகிறது. இதில் முதல் நாள் மட்டும் காலை 10 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் பொறியியல் கட்-ஆஃப் 200-க்கு 200 எடுத்தவர்கள் முதல் 198.25 கட்-ஆஃப் வரை எடுத்தவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதற்கு அடுத்த நாள் முதல் காலை 7.30 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு பிரிவு என நாள் ஒன்றுக்கு 8 பிரிவுகளாகக் கலந்தாய்வு நடத்தப்படும். 8-ஆவது பிரிவு மாலை 6.30 மணிக்குத் தொடங்கும். ஜூலை 28-ஆம் தேதி நிறைவு செய்யப்படும்.

No comments: