தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) இன்று காலை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1.80 லட்சம் அரசு ஒதுக்கீட்டு பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
2015-16 கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 6-ஆம் தேதி தொடங்கியது. மே 27-ஆம் தேதி வரை தமிழகத்தின் பிற மையங்களிலும், மே 29-ஆம் தேதி வரை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றிருந்த மையங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகமாகின. இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாகும்.
இதுபோல் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களின் எண்ணிக்கையும் இம்முறை வெகுவாகக் குறைந்தது. வெறும் 1 லட்சத்து 54 ஆயிரத்து 450 பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இம்முறை சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை வெளியிடப்பட்டது. மாணவர்கள் இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களின் பார்வைக்காக பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
No comments:
Post a Comment