தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்,. படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
மாலை 6 மணிக்கு மேல் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in ஆகியவற்றில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
தரவரிசைப் பட்டியலில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாணவன் நிஷாந்த் முதலிடத்தை பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த முகேஷ் கண்ணன் தரவரிசையில் இரண்டாம் இடத்தையும், திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரவீன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மருத்துவப் படிப்பிற்கு வரும் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் (2257 இடங்கள்), ஒரு பல் மருத்துவக் கல்லூரி (85 இடங்கள்) மற்றும் தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர மொத்தம் 31332 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான தர வரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் 17 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நாமக்கல் பகுதி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment