வரும் ஜூன்/ஜூலை 2015 நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களுக்கும் (தட்கல் உட்பட) ஜூன் 18ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தங்களது மார்ச் 2015 பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்வதன் மூலம் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வில் 15 மதிப்பெண்களுக்குக் குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கும் வர வேண்டும்.
மார்ச் 2015 பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வராதோர், சிறப்பு துணை தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதுவதோடு அறிவியல் பாட கருத்தியல் தேர்வையும் எழுத வேண்டும்.
உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment