Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 18 June 2015

எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண்: கடும் போட்டி

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர நிகழ் கல்வி ஆண்டிலும் (2015-16) மாணவர்களிடையே கடுமையான கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் உயிரியல்- வேதியியல்- இயற்பியல் ஆகிய கேள்வித்தாள்கள் எளிமையாக இருந்ததால், 132 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு (2015) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான மேலே குறிப்பிட்ட முக்கியப் பாடங்களின் கேள்வித் தாள்கள் சற்றே கடினமாக இருந்ததால், 17 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
எனினும் 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண்ணில் 37 பேர், 200-க்கு 199.50-இல் 57 பேர், 200-க்கு 199.25-இல் 67 பேர், 200-க்கு 199-இல் 100 பேர் என ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
விளைவு என்ன? எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 12,944 மாணவர்களிடையே (41 சதவீதம் பேர்) கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது. 
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) எம்.பி.பி.எஸ். சேர கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் வரிசை எண் 1292 முதல் 1627 வரை 336 மாணவர்கள், 197.25 என்ற ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள் அடிப்படையில் அனைத்துப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவு என இரண்டிலும் சேர்த்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமுதாய ரேங்க் எண் 1102 வரை எம்.பி.பி.எஸ். இட ஒதுக்கீடு வரையறுக்கப்பட்டுள்ளது. 
இதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ரேங்க் எண் 1185 வரை (வரிசை எண் 1626) ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஐப் பெற்ற மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ரேங்க் எண் 1102-ஐத் தாண்டி இடம்பெற்றுள்ள அந்த சமுதாயத்தைச் சேர்ந்த 84 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. 
எனினும் கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களின் இடங்களில், சமுதாய ரேங்க் எண் 1102-ஐத் தாண்டி இடம்பெற்றுள்ள ஒரு சில மாணவர்களுக்கு படிப்பில் சேர இடம் கிடைக்கும்.
ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்கள் குறித்த விவரம் அட்டவணையாக அளிக்கப்பட்டுள்ளது:
கட்-ஆஃப் மதிப்பெண் மாணவர்களின் எண்ணிக்கை
200-க்கு 200 17
200-க்கு 199.75 37
200-க்கு 199.50 57
200-க்கு 199.25 67
200-க்கு 199.00 100
200-க்கு 198.75 107 
200-க்கு 198.50 118
200-க்கு 198.33 3
200-க்கு 198.25 144
200-க்கு 198.00 200
200-க்கு 197.75 237
200-க்கு 197.67 1
200-க்கு 197.50 201
200-க்கு 197.33 1
200-க்கு 197.25 336
200-க்கு 197.00 375
200-க்கு 196.75 345
200-க்கு 196.67 1
200-க்கு 196.50 283
200-க்கு 196.25 310
200-க்கு 196.00 375
200-க்கு 195.75 324
200-க்கு 195.67 2
200-க்கு 195.50 342
200-க்கு 195.33 3
200-க்கு 195.25 346
200-க்கு 195.00 352
200-க்கு 194.75 287
200-க்கு 194.50 300
200-க்கு 194.44 1
200-க்கு 194.33 1
200-க்கு 194.25 313
200-க்கு 194.00 291

No comments: