தமிழக அரசு பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கான காலத்தை ஓராண்டாகவே தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் சார்பில் தமிழக முதல்வருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை:
பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான காலத்தை வரும் கல்வியாண்டில் இருந்து இரண்டு வருடங்களாக மாற்ற தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. தற்போது பி.எட்., படிப்பிற்கு ஆறு தாள்கள் பாடங்களாகவும், 40 நாட்கள் பயிற்சி காலம் எனவும் நடைமுறையில் உள்ளது. இதை வேண்டுமானால் ஒன்பது தாள்கள், 75 நாட்கள் என அதிகரித்து நிர்ணயம் செய்து இரண்டு வருடங்கள் என்பதை ஒரு வருடமாகவே தொடர வேண்டும். கல்வியியல் கல்லூரிகளில் ஒரு வருடம் பயிலவே, லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது. இதை இரண்டு வருடமாக உயர்த்தினால் நடுத்தர மற்றும் வசதியில்லாத மாணவ, மாணவிகள் படிக்க இயலாத நிலை ஏற்படும்.
ஆகவே தமிழக அரசு, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்காலத்தை ஓராண்டாகவே தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment