ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பொறியியல் சேர்வதற்காக நடத்தப்படும் ஜெ.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் டிசம்பர் 18 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுவதும் ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
www.jeemain.nic.in என்ற இணையதளம் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். JEE தேர்வு, Main மற்றும் Advanced என்ற இரு நிலைகளில் நடத்தப்படுகிறது.
JEE (Main) தேர்வைப் பொறுத்தளவில், பி.டெக்., பி.இ., ஆகிய படிப்புகளில் சேர, paper - I எழுத வேண்டும். பி.ஆர்க்., மற்றும் பி.பிளானிங் ஆகிய படிப்புகளில் சேர, paper - II எழுத வேண்டும். இத்தேர்வுகளுக்கான syllabus மாறுபட்டவை.
Paper - I தேர்வு, ஆன்லைன் அல்லது ஆப்லைன் ஆகிய 2 முறைகளிலும், paper - II தேர்வு, ஆப்லைன் முறையிலும் மட்டுமே நடத்தப்படுகின்றன.
Paper - I மற்றும் II -க்கான ஆப்லைன் தேர்வு நடைபெறும் தேதி - ஏப்ரல் 4, 2015.
Paper - I க்கான ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி - ஏப்ரல் 10, 2015.
இரண்டு தேர்வுகளுக்குமான காலஅளவு - 3 மணி நேரங்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
2012, 2013ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் அல்லது 2015ம் ஆண்டு எழுதவுள்ளோர் விண்ணப்பிக்கலாம். அதேசமயம், 2012ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாக பிளஸ் 2 முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை.
தேர்ச்சிப்பெறும் பொருட்டு, JEE (Main) தேர்வை அதிகபட்சம் 3 முறை மட்டுமே எழுத முடியும்.
அனைத்து விரிவான தகவல்களுக்கும் www.jeemain.nic.in.
No comments:
Post a Comment