மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ராஜ்யசபாவில் இதுகுறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்ததாவது: மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள 16 ஆயிரத்து 692 பணியிடங்களில், 6,251 பணியிடங்கள் காலியாக உள்ளன.
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனைத்து பல்கலைகளுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு கடிதம் எழுதியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment