Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 16 July 2014

TRB-TET: வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும்: ஆசிரியர் நியமனத்தில் காலியிடம் அதிகம் எதிரொலி

அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வெயிட்டேஜ் மார்க் அடிப்படையில் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு பிளஸ்-2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் ஆகியவை குறிப்பிட்ட அளவு சேர்க்கப்பட்டு கட்ஆப் மார்க் 100-க்கு கணக்கிடப்படுகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களில் வரலாறு பாடத்தில்தான் காலியிடங்கள் அதிகம் (3,592). எனவே, வரலாறு பாடத்தில் கட்ஆப் மார்க் குறையும். அதே போல் ஆங்கில பாடத்தில் 2822 காலியிடங்கள் இருப்பதால் அதற்கும் கட்ஆப் சற்று குறையும். அதே நேரத்தில் தாவரவியல், விலங்கியல் பாடங்களில் காலியிடங்கள் வெறும் 260 (தலா) மட்டுமே உள்ளதால் அவற்றுக்கு கட்ஆப் மார்க் மிகவும் அதிகமாக இருக்கும். ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப போட்டி அமைந்திருக்கும். பட்டதாரி ஆசிரியர் தேர்வுபட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.

No comments: