பிரிக்ஸ் என்பது வளரும் நாடுகள் அல்லது புதியதாக தொழில்மயமாகி வரும் ஐந்து நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்ததே பிரிக்ஸ் ஆகும். இந்த நாடுகளின் முதல் எழுத்தைக் கொண்டே பிரிக்ஸ் என்பதின் ஆங்கில வார்த்தை அமைந்துள்ளது. இந்த அமைப்புடன் தென் ஆப்பிரிக்கா இணையும் வரை பிரிக் என்றே இந்த கூட்டமைப்பு அழைக்கப்பட்டு வந்தது.
2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிகாவும் இணைந்த பிறகு , அதன் ஆங்கில முதல் எழுத்தான் எஸ் சேர்த்து பிரிக் என்பது பிரிக்ஸ் என ஆனது. 2006-ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பின் செயல்பாட்டிற்கான சந்திப்புகள் நடந்த போதும்,2009-ஆம் ஆண்டே இந்த கூட்டமைப்பின் முதல் மாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது.
பிரிக்ஸ் கூட்டணியாக இருந்த இந்நாடுகள் 2011-ல் பிரிக்ஸ் கூட்டமைப்பாக மாறியது. 2009-லிருந்து ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010 மாநாடுகளில் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றன.
ஐந்து நாடுகள் பங்கேற்ற முதல் பிரிக்ஸ் மாநாடு 2011-ல் நடைபெற்றது. இதன் நான்காவது மாநாடு, 2012-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்றது. கடந்தாண்டு, தென்னாப்பிரிக்காவில் இந்த மாநாடு நடைபெற்றது. இன்று நடைபெறும் 6-ஆவது மாநாடு, 2-ஆவது முறையாக பிரேசில் நடைபெற்று வருகிறது. இதில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment