Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 18 June 2014

தமிழகத்தில் குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி குறைவு: புதிய நடைமுறை காரணமா?

இந்த ஆண்டில் தமிழகம், கேரள மாநிலங்களில் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் ஜூன் 12ல் வெளியானது. இதில் 1122 இடங்களுக்கு தமிழகத்தில் இருந்து 109 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்; இது 9.7 சதவீதம். இதேபோல 2012ல் நடந்த தேர்வில் 998 இடங்களுக்கு 97 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதுவும் 9.7 சதவீதமே. ஆனால், 20 பேர் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வு பெற்றிருந்தனர். இது 20.6 சதவீத தேர்ச்சி ஆகும். மொத்தம் 998 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த அருள் தம்புராஜ் 6வது இடத்திலும், பிரபு சங்கர் 7 வது இடத்திலும் இருந்தனர்.

தேர்ச்சி குறைவு
2013ல் 109 பேரில் நான்கு பேர்தான் ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்ச்சி பெற்றிருந்தனர். மற்றவர்கள் ஐ.பி.எஸ்., ரயில்வே, வருமான வரித்துறை, தபால் துறை என குரூப் ஏ, பி, சி பணிகளுக்கே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதேபோல கேரளத்தில் 2012ல் 13 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் இந்திய அளவில் 1, 2, 4வது இடங்கள் உட்பட முதல் 25 இடத்தில் 4 பேர் இருந்தனர். ஆனால் 2013ல் முதல் 25 பேரில் ஒருவர்கூட வரவில்லை; 120 இடத்திற்குள் இரண்டு பேர்தான் உள்ளனர்.
பொதுவாக தமிழகத்தில் முன்பு 3, 4 சதவீதத்தினரே தேர்ச்சி பெறுவர். கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான பயிற்சி மையங்கள் உருவாகி வழிகாட்டியதால், தற்போது 10 சதவீதமாக உயர்ந்தது. அதே சமயம் பிற வட மாநிலங்களைப் பொறுத்தவரை, தனியார் பயிற்சி நிறுவனங்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. அங்கெல்லாம் தற்போது வரை 3 முதல் 5 சதவீத தேர்ச்சியே உள்ளது. ஆனால் தொடர்ந்து 10 ஆண்டுக்கும் மேலாக 10 சதவீத தேர்ச்சியை பெற்ற தமிழகத்தில் இந்த ஆண்டு, ஐ.ஏ.எஸ். தேர்ச்சி குறைந்து விட்டது.
காரணம் என்ன?
ஐ.ஏ.எஸ்.களின் எண்ணிக்கை குறைய 2013ல் யு.பி.எஸ்.சி. மெயின் தேர்வில் செய்யப்பட்ட மாறுதல் தான் காரணமாக இருக்கலாம் என கருத்து நிலவுகிறது. கடந்த 2012 வரை 2 விருப்பப் பாடங்கள் இருந்தன; அது, இந்த ஆண்டு ஒன்றாக குறைக்கப்பட்டது. பொது அறிவு 2 தாள்கள் என இருந்ததை 4 தாள்களாக மாற்றினர். இதிலும் ஒரு தாள் எத்திக்ஸ் என்னும் அற நெறியியல் பாடம்.
மேலும், முன்பு விருப்பப்பாட வினாக்களுக்கு 67 சதவீதம் வெயிட்டேஜ், பொது அறிவுக்கு 33 சதவீத வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டன. ஆனால் 2013ல் அப்படியே தலைகீழாக மாறி, பொது அறிவு வினாக்களுக்கு 67 சதவீத வெயிட்டேஜ், விருப்பப்பாடத்திற்கு 33 சதவீதம் கொடுக்கப்பட்டது.
பொதுவாக வினாக்கள் ஆங்கிலம், இந்தியில் இடம் பெற்றிருக்கும். வட மாநிலங்களில் அவற்றை எளிதாக எழுதி தேர்ச்சி பெறுகின்றனர். மேலும் அங்கு 3 அல்லது 5 சதவீத தேர்ச்சியே இருக்கும். எனவே புதிய வினா அமைப்பால் அங்கு தேர்ச்சி குறையவில்லை என்கின்றனர்.
அதே சமயம் தமிழகம், கேரளாவில் தேர்ச்சி குறைந்துள்ளது. இதற்கு புதிய வினாமுறையும், விருப்பப்பாடத்தில் வினாக்கள் குறைந்ததுமே காரணம் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

No comments: