தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) ரத்து செய்துள்ளது.
இந்தக் கல்லூரிகள் 2014-15 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை செய்ய ஏஐசிடிஇ தடை விதித்துள்ளது.
இது குறித்து ஏஐசிடிஇ அதிகாரி ஒருவர் கூறியது:
நீதிமன்ற உத்தரவு மற்றும் புகார்களின் அடிப்படையில் தமிழகத்தில் 40 கல்லூரிகளில் திடீர் ஆய்வை அதிகாரிகள் குழு மேற்கொண்டது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 20 பொறியியல் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், உரிய எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது.
எனவே, இந்தக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதோடு, 2014-15 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நிறைவேற்றி, அடுத்த 2015-16 கல்வியாண்டுக்கு புதிதாக அங்கீகாரம் பெற இந்த கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
No comments:
Post a Comment